Saturday, 13 August 2016

குலதெய்வத்திற்காக ஒரு வலைப்பூ

சகோதரன்
கடவுள் எம்ஜிஆர்
எல்லாம் சிவன் செயல்

இப்படி விரிந்து போகும் என்னுடைய வலைப்பூ பட்டியல்களில் குலதெய்வத்திற்காகவும் ஒரு தனித்த வலைப்பூவை இணைக்கிறேன். ஆதி தமிழனின் தொன்மத்தினை மறந்து பொருள் தேடும் உலகில் தொலைந்து போனவர்களுக்கு, தங்களின் ரத்த சொந்தங்களையும், பங்காளிகளையும் காண ஆசை வந்தால் அதற்கு பெரிய உதவி செய்பவை இந்த குல தெய்வங்கள் தான்.

என்னுடைய பாட்டனாரின் உடன்பிறந்தவர்கள் ஏழு பேர். அவர்களின் வாரிசுகளையும், பேரன் பேத்திகளையும் எங்களால் வீட்டு விசேசங்களில் கூட ஒன்றுதிரட்ட முடியவில்லை. ஆனால் மாசி பெரியசாமி கோயிலில் அமாவாசை தோறும் அவர்களுடன் கூடி மகிழலாம். அங்கே என்னுடைய பாட்டனாரின் தகப்பன் வழி சொந்தங்களும்., பாட்டனுக்கும் பாட்டன் சொந்தங்களும் வந்து ஒன்று கூடி விழா எடுத்து மகிழ்கின்றனர்.

எனக்கு மட்டுமல்ல, தன்னுடைய பூர்வீக குடிகளை சந்திக்க நினைக்கின்ற அனைத்து மனிதர்களுக்கும் குல தெய்வக் கோயில்கள் மட்டுமே நிரந்தர வழியை உண்டாக்கித் தருபவை. ஒரே குலதெய்வத்தினை வழிபடுகின்றவளுக்குள் ரத்த சொந்தம் உண்டென்பதாலேயே திருமணங்களை செய்து கொள்வதில்லை.

ஒரே குலதெய்வத்தினை வழிபடுகின்றவர்கள் ஏதேனும் முறையில் ரத்த சம்பந்தம் உடையவர்கள். ஒரு தாவரத்தின் சல்லி வேர் போல இந்த உலமெங்கும் பரவியிருக்கின்ற நம் முன்னோர்களின் ரத்தங்கள்.

குலதெய்வக் கோயில்களில் ஒன்று கூடுவோம்..
குலமாந்தர்களை கண்டு மகிழ்வோம்...